actor m.s.baskar |
ராதாமோகன் இயக்கும்
’உப்புக்கருவாடு’ படத்தில் நகைச்சுவை நடிகர் எம்.எஸ்.பாஸ்கர் ஒரு முக்கியமான வேடத்தில்
நடித்து வருகிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு கடந்த சில நாட்களுக்கு முன்பு காசிமேடு
கடற்கறை பகுதியில் நடைபெற்றது.
இந்தப் படத்திற்காக
இரண்டு இயந்திர படகுகளை வாடகைக்கு எடுத்துச் சென்று நடு கடலில் படப்பிடிப்பு நடத்தியுள்ளனர்.
இதில் ஒரு இயந்திர
படகை தான் ஓட்டுவதாக கூறி, நடிகர் எம்.எஸ்.பாஸ்கர் ஓட்டிப் பார்த்திருக்கிறார். பிறகு
அவரே அன்று முழுவதும் ஓட்டுவதற்கு படகுக் காரர் வாய்ப்பு கொடுத்திருக்கிறார். ஏற்கனவே
படகு ஓட்டி அனுபவம் பெற்றவர் போல அவர் ஓட்டிச் சென்றதைப் பார்த்த, சக இயந்திர படகு
ஓட்டுனர்கள், இவரது திறமையை கண்டு வியந்து, பாராட்டி உள்ளனர்.
ஏற்கனவே குதிரை சவாரி
செய்து பிரமிக்க வைக்கும் எம்.எஸ்.பாஸ்கர், இப்போது எந்திரப் படகு ஓட்டுவதிலும் வல்லவராக
இருக்கிறார்.
-
ஜி.பாலன்
செய்தி தொடர்பாளர்
செல்போன்:
93833 88860